தமிழக வெற்றி கழகம் சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம்

தமிழக வெற்றி கழகம் சார்பில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரம் விநியோகம் செய்யப்பட்டது பின்னர் பேருந்து நிலையத்தில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது;

Update: 2024-12-31 01:24 GMT
தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பூர் கிழக்கு மாவட்டம் சார்பாக கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கையொப்பமிட்ட துண்டு பிரசுரம் தாராபுரம் அருகே உள்ள மகளிர் கல்லூரியிலும்,  மற்றும் பஸ் நிலையத்திலும் வழங்கப்பட்டது. பிரசுரங்களை திருப்பூர் கிழக்கு மாவட்ட மகளிர் அணி தலைவரும் கவுண்டச்சிபுதூர் ஊராட்சி மன்ற தலைவர் ஆன செல்வி ரமேஷ் தலைமையில் நிர்வாகிகள் வழங்கினர். நிகழ்ச்சியில் தாராபுரம் நகர மகளிர் அணி தலைவர் சாந்தானம்மாள், நகர துணை தலைவர் நாகலட்சுமி, மேற்கு ஒன்றிய தலைவர் ரஞ்சிதா, ஒன்றிய செயலாளர் கார்த்திகா குண்டடம்  ஒன்றிய தலைவர் வேலுமணி மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் கைது செய்யப்பட்டதை கண்டித்து தாராபுரம் பஸ் நிலையத்தில் தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News