கள்ளக்குறிச்சியில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. கள்ளக்குறிச்சி சேலம் மெயின் ரோட்டில் உள்ள 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரமும் தொடர்ந்து தீபாராதனை மற்றும் தங்கக்கவசம் அணிவிக்கப்பட்டது.பின்னர் சுவாமிக்கு வடை மாலை சாற்றப்பட்டது.