கந்தர்வகோட்டை அருகே மின்னாத்தூரைச் சேர்ந்தவர் அந்தோணிசாமி (32). கரம்பக்குடி சாலையில் உள்ள தனியார் நிறுவன வளாகத்தில் அமர்ந்து நேற்று மது அருந்தி கொண்டிருந்தார். அளவுக்கு அதிகமாக மது அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது குறித்து உறவினர்கள் அளித்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.