பொள்ளாச்சி: தேங்காய் விலை உயர்வு !

தேங்காய் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2025-01-05 06:58 GMT
கோவையில், ஆனைமலை, பொள்ளாச்சி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தென்னை மரங்கள் வேர் அழுகல் மற்றும் வெள்ளைப் பூச்சித் தாக்குதலால் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக தேங்காய் விளைச்சல் கடுமையாகக் குறைந்து, விலை கிலோ ரூ.60 ஆக உயர்ந்துள்ளது.ஆனைமலை தேங்காய் உற்பத்தி விவசாயிகள் சங்க இயக்குனர் மோகன்ராஜ் இது பற்றி நேற்று கூறுகையில், தென்னையில் கேரள வேர் அழுகல் நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் தேங்காய் விலை உயர்ந்துள்ளதால், அம்பாரம்பாளையம், பாலக்காடு ரோடு, மீனாட்சிபுரம், குடிமங்கலம், உடுமலை போன்ற பகுதிகளிலும் விளைச்சல் குறைந்து விலை உயர்ந்துள்ளது. கொப்பரை விலையும் கிலோ ரூ.160 ஆக உயர்ந்துள்ளது. மே, ஜூன் மாதங்களில் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் இளநீர் விலை ரூ.50 வரை உயரும் என தெரிவித்தார்.மேற்கு மண்டலத்தில் தென்னைகள் அதிகம் உள்ள கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, உடுமலை, ஈரோடு பகுதிகளில் இந்த பிரச்சனை கடுமையாக உணரப்படுகிறது.விவசாயிகள் இந்த நிலை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

Similar News