திருச்சியை சேர்ந்த பிரியா ஸ்ருதி, கார்த்திகேயன் ஆகிய இருவரும் நேற்று மதியம் விராலிமலை வந்துவிட்டு மீண்டும் திருச்சி திரும்புகையில் மாதிரிபட்டி என்ற இடத்தில் அடையாளம் தெரியாத நான்கு சக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. இதில் பலத்த காயமடைந்த இருவரும் திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரிக்ன்றனர்.