பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடைமாலை அலங்காரம்.
மதுரையில் பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வடை மாலையால் அலங்காரம் செய்யப்பட்டது.
மதுரை மதுரை மேலமாசி வீதி டி. எம் கோர்ட் அருகே உள்ள ஸ்ரீ மதனகோபால சுவாமி கோவிலில் உள்ள பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் சஞ்சீவி ஆஞ்சநேயருக்கு நேற்று (டிச.30) காலை யாகசாலை அமைக்கப்பட்டு 16 வகையான வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மாலையில் வடை மாலை கொண்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் ஆராதனைகள் நடைபெற்றன. இதில் நூற்றக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கு வந்திருந்த பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.