உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாயகளைபிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருட்களை எம்எல்ஏ வழங்கினார்
உதயநிதியின் பிறந்தநாளை முன்னிட்டு நாயகளைபிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு உள்ளிட்ட எழுது பொருட்களை ஜெயங்கொண்ட எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் வழங்கினார்
அரியலூர், ஜன. 3- நாயகனைப்பிரியாள் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில்,மாவட்ட மருத்துவரணி தலைவர் டாக்டர் மா.சங்கர் ஏற்பாட்டில், திமுக இளைஞரணி செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மாணவ,மாணவிகளுக்கு நோட்டு,எழுதுபொருட்களை,எம் எல் ஏ க.சொ.க.கண்ணன் வழங்கினார்.நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் குருநாதன்(வட்டார ஊராட்சி), பொய்யாமொழி (கிராம ஊராட்சி),தலைமை ஆசிரியை செல்வி,இளநிலை பொறியாளர் சரோஜினி,மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் என்.ஆர்.இராமதுரை, பொருளாளர் த.நாகராஜன்,ஊராட்சிமன்ற தலைவர் தி.இராசாராம்,ஒன்றிய துணை செயலாளர் இந்துமதி நடராஜன்,மாவட்ட பிரதிநிதிகள் கோவி.சீனிவாசன், சி.கண்ணதாசன்,மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் த.குணசீலன் மற்றும் அரசு அலுவலர்கள்,கிளை கழக நிர்வாகிகள்,இருபால் ஆசிரியர்கள், மாணவ,மாணவிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.