தியாகதுருகம் கஸ்துாரிபாய்நகரை சேர்ந்தவர் முத்தையன் மகன் கதிர்வேல்,47; மூட்டை துாக்கும் தொழிலாளி. இவர், நேற்று முன்தினம் இரவு சினிமா படம் பார்ப்பதற்காக டிவிஎஸ்., ஸ்கூட்டியில் கள்ளக்குறிச்சிக்கு சென்றார். படம் முடிந்து நள்ளிரவு 12 மணியளவில் கள்ளக்குறிச்சியிலிருந்து துருகம் சாலையில் உள்ள பைக் ேஷாரும் அருகே சென்ற போது, எதிர்திசையில் வந்த அரசு பஸ், கதிர்வேல் சென்ற பைக் மீது மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் படுகாயமடைந்த கதிர்வேல் சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் வழியிலேயே உயிரிழந்தார். இது குறித்த புகாரின் பேரில், விபத்து ஏற்படுத்திய பஸ்டிரைவர் சங்கர் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.