அதிகாலை முதல் வாகன சோதனை
காங்கேயம் நகர் பகுதியில் அதிகாலை முதல் வாகன சோதனை;
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவுப்படி காங்கேயம் காவல்துறை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் காங்கேயம் காவல் நிலைய காவல் ஆய்வாளர் விவேகானந்தன் மற்றும் உதவியாளர் கார்த்திக் குமார் மற்றும் காவலர்கள் வருகிற 2025 புத்தாண்டு தினத்தை முன்னிட்டு குற்றங்களை தடுக்கும் பொருட்டும். மக்கள் பாதுகாப்பாகவும் பயமில்லாமல் இருக்கவும் காங்கேயம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முக்கியமான இடங்களில் காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் ரவுண்டானா, சென்னிமலை ரோடு , முத்தூர் ரோடு, தாராபுரம் ரோடு ஆகிய முக்கியமான சந்திப்புகளில் அதிகாலையில் இருந்து வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. மற்றும் முக்கியமான இடங்களில் காவலர்கள் பணியமர்த்தப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டனர்.