வாணியம்பாடியில் புத்தாண்டை முன்னிட்டு காவல் துறையினர் கேக் வெட்டி கொண்டாட்டம்

வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு 2025 முன்னிட்டு காவல் துறை சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பங்கேற்பு.

Update: 2025-01-01 02:29 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு 2025 முன்னிட்டு காவல் துறை சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம். திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா பங்கேற்பு. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பேருந்து நிலையத்தில் ஆங்கில புத்தாண்டு(2025) வரவேற்கும் வகையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் விஜய் குமார் தலைமை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா கலந்து கொண்டு கேக் வெட்டி காவல் துறையினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்களுக்கு வழங்கி புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார். நிகழ்ச்சியில் நகர, கிராமிய மற்றும் போக்குவரத்து காவல் ஆய்வாளர்கள், ரோந்து பணி காவலர்கள், குற்றப்பிரிவு காவலர்கள், தனிபிரிவு காவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News