தொழிலாளர் நல ஆணையர் தலைமையிலான பேச்சுவார்த்தைக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் வராததால் தொழிற்சங்கத்தினர் அதிர்ச்சி

குமாரபாளையம் விசைத்தறி தொழிலாளர் போனஸ் பேச்சுவார்த்தைக்கு விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் வராமல் புறக்கணிப்பு;

Update: 2025-01-01 13:49 GMT
குமாரபாளையம் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் இந்த மாதிரி கண்காணிக்க சுமார் 40 ஆயிரத்துக்கு மேற்பட்ட விசைத்தறிகள் இயங்குகின்றன இந்த விசைத்தடிகளை இயக்க மற்றும் அதனைச் சார்ந்த ஒலி எடுப்பது அச்சு பிணைப்பது தார் ஓட்டுபவர் நூல் ஓட்டுபவர் என சுமார் ஒரு லட்சம் தொழிலாளர்கள் இதனை சார்ந்து வாழ்கின்றனர் இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் போனஸ் வழங்குவது வழக்கம் அதேபோல் இந்த ஆண்டு தை பொங்கல் நெருங்குவதால் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினர் விசைத்தறி தொழிலாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்து சேலம் தொழிலாளர் நல ஆணையரிடம் மனு வழங்கியதை அடுத்து தொழிலாளர் நல ஆணையர் செண்பக ராமன் குமாரபாளையம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி சங்கத்தினரை டிசம்பர் 31ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பேச்சுவார்த்தைக்கு வருமாறு சுற்றரிக்கை அனுப்பினார் இதனை அடுத்து டிசம்பர் 31ஆம் தேதி தொழிற்சங்கத்தினர் சேலம் தொழிலாளர் நல ஆணையத்தில் உரிய நேரத்தில் ஆஜரான போதிலும் குமாரபாளையம் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் நாமக்கல் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களும் வரவில்லை தங்களுக்கு வர இயலாமைக்கு காரணங்கள் மட்டும் தெரிவித்தனர் இதனால் ஏமாற்றமடைந்த தொழிற் சங்கத்தினர் மீண்டும் தொழிலாளர் ஆணையரிடம் கோரிக்கை வைத்ததின் பேரில் தொழிலாளர் நல ஆணையர் செண்பகராமன் உடனடியாக குமாரபாளையம் வட்டாட்சியர் சிவக்குமாரை தொடர்பு கொண்டு ஜவுளி உற்பத்தியாளர்களையும் விசைதறி தொழிலாளர் நல்ல சங்கத்தினரின் அழைத்து பேச்சுவார்த்தை நடத்த கூறினார் இதனை அடுத்து குமாரபாளையம் வட்டாட்சியர் ஜனவரி 6ஆம் தேதி அன்று விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தினருக்கும் இடையே போனஸ் பேச்சுவார்த்தை நடத்துவது என தெரிவித்துள்ளார் போனஸ் பேச்சுவார்த்தை ஆறாம் தேதி நடந்தாலும் முடிவு எட்டப்படுமா என்பது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது

Similar News