ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு அக்கியம்பட்டி ராகவேந்திரர் ஆலயத்தில் ஸ்ரீ மகா கணபதி ஹோமம்!
சேந்தமங்கலம் அடுத்த, அக்கியம்பட்டியில், லஷ்மி நரசிம்ம சமேத ராகவேந்திரர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டம் அக்கியம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ ராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஆங்கில வருட பிறப்பை முன்னிட்டு மகா கணபதி ஹோமம் நடைபெற்றது. தொடர்ந்து மூலவர் ஸ்ரீ ராகவேந்தர், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம சுவாமி மற்றும் பரிவார தெய்வங்களான ஸ்ரீ விநாயகர்,ராமன் லட்சுமணன்,சீதை, மகாலட்சுமி உள்ளிட்ட தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்களும் ஆராதனைகளும் நடைபெற்றன. விழாவில் சுற்றுவட்டார பகுதிகளான வடுகப்பட்டி ,சேந்தமங்கலம், முத்துக்காப்பட்டி ,கொண்டமநாயக்கன்பட்டி மற்றும் நாமக்கல் பகுதியில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்