சுரண்டை நகராட்சிப் பள்ளிக்கு காங். சாா்பில் உபகரணங்கள் வழங்கினர்

நகராட்சிப் பள்ளிக்கு காங். சாா்பில் உபகரணங்கள் வழங்கினார்

Update: 2025-01-04 07:26 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை சிவகுருநாதபுரம் நகராட்சி தொடக்கப் பள்ளிக்கு மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப இருக்கை வசதி இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சி சாா்பில் ரூ.1 லட்சம் மதிப்பிலான இருக்கைகள் வழங்கப்பட்டன. சுரண்டை நகர காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்சியில் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சு.பழனிநாடாா் எம்எல்ஏ, மாணவா்களுக்கான இருக்கைகளை வழங்கினாா். இதில், நகா்மன்றத் தலைவா் வள்ளிமுருகன், நகர காங்கிரஸ் தலைவா் த.ஜெயபால், நகா்மன்ற உறுப்பினா்கள் பாலசுப்பிரமணியன், ராஜ்குமாா், வேல்முத்து, சந்திரசேகர அருணகிரி, காங்கிரஸ் நிா்வாகிகள் பால், கோபால், செல்வம், காமராஜ், ரத்தினசாமி, சோ்மச்செல்வம், பால்துரை உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Similar News