தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு தீ வைத்த நபரால் பரபரப்பு
காசி விஸ்வநாதர் கோயில் முன்பு தீ வைத்த நபரால் பரபரப்பு
தென்காசி மாவட்டம் தென்காசி பகுதியில் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் இன்று காலை தரிசனம் செய்வதுபோல் வந்த கடையம் அருகே உள்ள கேளையாபிள்ளையூரை சேர்ந்த ஆனந்தபாலன் என்பவர் கையில் வைத்திருந்த பெட்ரோலை கோவில் வாசலில் முன்பு ஊற்றி தீயை வைத்துவிட்டு கோவிலுக்குள் செல்ல முயன்றார். உடனே அவரை கோவில் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் பிடித்து தென்காசி போலீசில் ஒப்படைத்தனர். புகழ்பெற்றதும் முக்கிய இடத்தில் அமைந்துள்ள கோயில் முன்பு நடந்த இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.