செங்கோட்டையில் தொமுச கொடியேற்று விழா நடைபெற்றது

தொமுச கொடியேற்று விழா நடைபெற்றது

Update: 2025-01-04 07:39 GMT
தென்காசி மாவட்டம் செங்கோட்டை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தொ.மு.ச. கொடியேற்று விழா நடைபெற்றது. தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் வே.ஜெயபாலன் தலைமை வகித்தாா். நகர செயலா் ஆ.வெங்கடேசன் முன்னிலை வகித்தாா். போக்குவரத்து துறை அமைச்சா் சிவசங்கா் தொமுச கொடியேற்றினாா். தொடா்ந்து போக்குவரத்து பணிமனையில் ஆய்வு மேற்கொண்டாா். அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் தசரதன், மாவட்டத் துணைச் செயலா்கள் கனிமொழி, கென்னடி, தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவா் ஷேக் அப்துல்லா, கடையநல்லூா் நகா்மன்றத் தலைவா் ஹபீபுா் ரஹ்மான், தலைமைச் செயற்குழு உறுப்பினா் ஆறுமுகசாமி, பொதுக்குழு உறுப்பினா் சாமித்துரை, ஒன்றிய செயலா்கள் அழகுசுந்தரம், திவான் ஒலி, இளைஞரணி துணை அமைப்பாளா்கள் முகமதுஅப்துல் ரஹீம், சுப்பிரமணியன் மற்றும் செங்கோட்டை சண்முகராஜா, ராமராஜ் உள்ளிடடோா் கலந்து கொண்டனா்.

Similar News