திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில்

வெளியே படுத்தா பேய் பிடிச்சுக்கோம் அதனால திருப்பத்தூர் ஹாஸ்பிடல் இருக்கிற வேப்ப மரத்தடியில் படுக்கிறேன்!;

Update: 2025-01-02 05:10 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வெளிய படுத்தா பேய் பிடிச்சுக்கோம் அதனால திருப்பத்தூர் ஹாஸ்பிடல் இருக்கிற வேப்ப மரத்தடியில் படுக்கிறேன்!* திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சின்னத்தம்பி மகன் கிருஷ்ணமூர்த்தி (40) இவர் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் திருப்பத்தூர் நகர காவலர் சீனிவாசன் ரோந்து படையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார் அப்போது சந்தேகத்தின் உரிய வகையில் வேப்ப மரத்தின் அடியில் படுத்திருந்த நபரை எழுப்பி விசாரணை மேற்கொண்ட போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார். மேலும் அப்போது விசாரணையை தொடங்கிய காவலர் லட்சுமிபுரம் பகுதியைச் சார்ந்தவர் என்பதும் மேலும் நான் தனியாக வசித்து வருகிறேன் எனக்கு பேய் என்றால் மிகவும் பயம் மேலும் அதன் காரணமாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள வேப்ப மரத்தடியில் படுத்தால் மட்டுமே தூக்கம் வருகிறது நான் வெளியே எங்காவது படுத்தால் பேய் பிடித்துக் கொள்ளும் எனவும் பதில் கூறியதால் காவலர் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் கிருஷ்ணமூர்த்தியின் தொலைபேசியை காவலர் வாங்கி அதில் உள்ள உறவினருக்கு தொலைபேசியில் அழைத்து இவர் இதுபோல் எவ்வளவு நாட்கள் செய்து வருகிறார் மேலும் இவர் யார் உங்களுக்கு தெரிந்தவர்களா? எனவும் விசாரணை மேற்கொண்டார். அதன் பின்பு அவர் இதுபோல் பல நாட்களாக திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் உள்ள வேப்ப மரத்தை அடியில் தான் உறங்கி வருகிறார் என்று தகவல் தெரிவித்ததன் காரணமாக இது போல் இனிமேல் செய்யக்கூடாது மேலும் செய்தால் உங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் எனக்கூறி அறிவுரை வழங்கி அங்கிருந்து அனுப்பி வைத்தார்…

Similar News