திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலை திருவிழா நிகழ்ச்சிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் செல்லும் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

திருப்பத்தூர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கலை திருவிழா நிகழ்ச்சிக்கு செல்லும் மாணவ மாணவியர்கள் செல்லும் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்;

Update: 2025-01-02 08:59 GMT
திருப்பத்தூர் மாவட்டம் மாநில அளவிலான நடைபெறும் கலைத் திருவிழாவிற்கு செல்லும் மாணவர்களின் பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்த கலெக்டர்! கவனத்துடன் பேருந்தே இயக்க வேண்டும் டிரைவருக்கு கலெக்டர் அட்வைஸ் மாணவா்களின் கலைத்திறன்களை வெளிக்கொணரும் விதமாக, அரசுப் பள்ளி மாணவா்களுக்கு கலை சாா்ந்த பயிற்சிகள் கலை அரங்க செயல்பாடுகள் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் 6 முதல் 12 -ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு, பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத்திருவிழா போட்டிகள் நடத்தப்பட்டுகின்றன. இதில் வெற்றி பெற்ற மாணவா்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேபோல் திருப்பத்தூர் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகள் 30 வகையான கலை திருவிழாவில் கலந்து கொண்டு 137 பேர் வெற்றி பெற்றனர். இதில் ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பைச் சார்ந்த 75 மாணவர்கள் ஈரோடு மாவட்டத்தில் உள்ள கல்லூரிக்கும் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் 62 பேர் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கல்லூரிக்கும் கலைத்திருவிழா போட்டியில் பங்கேற்க செல்ல இருந்தனர். மேலும் மாநில அளவிலான நடைபெறும் கலைத் திருவிழாவில் கலந்துகொள்ள செல்லும் மாணவ மாணவிகளின் பேருந்து மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கொடி அசைத்து துவக்கி வைத்தார். மேலும் பேருந்து ஓட்டுனரிடம் மிக கவனமாக பேருந்தை இயக்குங்கள் எனவும் அறிவுரை வழங்கினார் இதில் மாணவ மாணவிகளுடன் 20 ஆசிரியர்களும் மற்றும் 4 பயிற்றுநர்கள் உடன் சென்றுள்ளனர். இந்த நிகழ்வில்மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புண்ணியகோடி, மாவட்ட உதவி திட்ட அலுவலர் பிரபாகரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் உடன் இருந்தனர்.

Similar News