வாணியம்பாடி அருகே கடும் குளிரில் இரு பெண் குழந்தைகளை விட்டு சென்ற தாய்

வாணியம்பாடி அருகே கடும் குளிரில் இரு பெண் குழந்தைகளை ஆதரவற்றோர் விடுதின் அருகே விட்டு சென்ற தாய்*

Update: 2025-01-04 01:43 GMT
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கடும் குளிரில் இரு பெண் குழந்தைகளை ஆதரவற்றோர் விடுதின் அருகே விட்டு சென்ற தாய்* திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே கருணை இல்லம் என்ற ஆதரவற்றோர் விடுதி செயல்பட்டு வருகிறது நேற்று நள்ளிரவில் விடுதியின் அருகில் குழந்தைகள் அழுகை குரல் கேட்டு அங்கே சென்று பார்த்த போது இரு பெண் குழந்தைகள் அழுது கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர், பின்பு கருணை இல்ல நிர்வாகம் அந்தப் பெண் குழந்தைகளை மீட்டுனர், அப்பொழுது அங்கே அடையாளம் தெரியாத பெண்மணி தொலைவிலிருந்து ஓடுவதைக் கண்டு, உடனடியாக அங்கு சென்று பார்த்தபோது அந்தப் பெண்மணி அந்த இடத்தை விட்டு ஓடி விட்டதால் உடனடியாக நகர காவல் நிலையத்துக்கு, இச்சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தன் பெயரில், போலீசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடும் குளிரில், இரு பெண் குழந்தைகளை, விட்டுச் சென்ற தாயின் செயல் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Similar News

7 பேர் கைது
2 பேர் கைது