டாட்டா ஏசி வாகனம் வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல், ஒருவர் படுகாயம்
டாட்டா ஏசி வாகனம் வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல், ஒருவர் படுகாயம்
மதுராந்தகம் அருகே மாம்பாக்கம் மேம்பாலத்தில் டாட்டா ஏசி வாகனம் வேன் மற்றும் இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் இரு சக்கர வாகனத்தில் வந்தவர் படுகாயம். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே சூனாம்பேடு சாலையில் உள்ள மாம்பாக்கம் மேம்பாலத்தில் மதுராந்தகத்திலிருந்து சூனாம்பேடு நோக்கி சென்ற டாட்டா ஏசி வேன்வாகனம் மீது அதிவேகமாக மதுராந்தகம் நோக்கி வந்த இருசக்கர வாகன வேன் மீது மோதியதில் நுகம்பல் பகுதி சென்ற தங்கராஜ் (வயது 43) என்பவர் படுகாயம் அடைந்தார் உடனடியாக மதுராந்தகம் போலீசருக்கு தகவல் அனுப்பப்பட்டு அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து படுகாயம் அடைந்த தங்கராஜை ஆம்புலன்ஸ் வாகனம் மீது மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு அவர் கவலைக்கிடமான நிலையில்இருப்பதால் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த விபத்து குறித்து மதுராந்தகம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.