ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமி முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை.

ஜெயங்கொண்டம் கழுமலை நாதர் கோயிலில் வளர்பிறை அஷ்டமி முன்னிட்டு பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.

Update: 2025-01-06 16:26 GMT
அரியலூர் ஜன.6 - வளர்பிறையில் வரும் அஷ்டமி காலபைரவருக்கு ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை ஒட்டி ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகமும் சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது. யாகத்தில் மஞ்சள் குங்குமம் வெட்டிவேர் நன்னாரி வேர் கடுக்காய் வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள் மா பலா வாழை திராட்சை மாதுளை எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் இடப்பட்டன. பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது ஜெயங்கொண்டம் அருகிலுள்ள செங்குந்தபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான மக்கள் கால பைரவரை வணங்கி தரிசித்துச் சென்றனர்

Similar News