பொது மக்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியினை ஆட்சியர் தொடங்கி வைத்தார்

பொது மக்களிடையே சுற்றுச்சூழல் மற்றும் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடத்தப்பட்ட மாரத்தான் போட்டியினை மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்,இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார். -;

Update: 2025-01-05 10:35 GMT
விருதுநகர் மாவட்டம், சிவகாசி ஹட்சன் ஸ்போர்ட்ஸ் அகாடமி வளாகத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் ஹட்சன் நிறுவனம் இணைந்து நீர் நிலைகளை புணரமைத்தல் குறித்து "ஒவ்வொரு நீர் துளியையும் சேமிப்பது ஒவ்வொருவரின் கடமை" என்ற தலைப்பில் நடைபெற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டியினை சிவகாசி சார் ஆட்சியர் திருமதி ந.ப்ரியா ரவிச்சந்திரன்,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில், மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த மாரத்தான் போட்டி 10 கி.மீ. பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு நடைபெற்றது. ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற உத்திர பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் பகுதியைச் சேர்ந்த தனுஜ் என்பருக்கு முதல் பரிசு ரூ.30,000-மும், தூத்துக்குடியை சேர்ந்த மாணிக்கத்துரை எண்பருக்கு இரண்டாம் பரிசு ரூ.15,000-மும், தேனி சின்னமனூர் பகுதியைச் சேர்ந்த சருண்குமார் என்பருக்கு மூன்றாம் பரிசு ரூ.10,000-மும், பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற இராஜபாளையம் முகவூர் பகுதியைச் சேர்ந்த கௌசிகா என்பருக்கு முதல் பரிசு ரூ.30,000-மும், இராஜபாளையத்தைச் சேர்ந்த நிவேதா என்பருக்கு இரண்டாம் பரிசு ரூ.15,000-மும், புதுக்கோட்டை மாவட்டம் கூடலூர் பகுதியைச் சேர்ந்த ராமு என்பருக்கு மூன்றாம் பரிசு ரூ.10,000-மும், வழங்கப்பட்டது.

Similar News