புத்தாடைகள் வழங்கினார்
ஈரோட்டில் காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் புத்தாடைகளை வழங்கினார்.
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் நேதாஜி தினசரி காய்கறி சந்தை வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் கலந்து கொண்டு, 300க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்களுக்கு புத்தாடைகளை வழங்கினார். அதனை தொடர்ந்து அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கொடி கம்பத்தில் தனது கட்சி கொடியை ஏற்றி வைத்த ஜி.கே வாசனுடன், பொதுமக்கள் செல்பி புகைப்படங்களை எடுத்து மகிழ்ந்தனர். இந்நிகழ்ச்சியில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் விடியல்சேகர், யுவராஜா, மாவட்ட தலைவர் விஜயகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்