சம்பா,தாளடி நெற்பயிர்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு..
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டத்தில், வடகிழக்கு பருவமழையினால் பாதிக்கப்பட்ட சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்களை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் 2024-25-ஆம் ஆண்டில் சம்பா பருவத்தில் 1,04,539 எக்டேரிலும், தாளடி பருவத்தில் 39,396 எக்டேரிலும், ஆக மொத்தம் 1,43,935 எக்டேரில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 2024ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெய்த வடகிழக்கு பருவமழையினால் 287 வருவாய் கிராமங்களில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் 2823.095 எக்டேரிலும், நிலக்கடலை 3.45 எக்டேரிலும் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம், நன்னிலம் வட்டம், மேனாங்குடி, கொட்டூர் மற்றும் பண்டாரவாடை ஆகிய வருவாய் கிராமங்களில் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை திடீர் ஆய்;வு செய்தார். இவ்ஆய்வில், திருவாரூர், வேளாண்மை இணை இயக்குநர் திருமதி.பாலசரஸ்வதி, வேளாண்மை துணை இயக்குநர் /மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, வட்டாட்சியர் ரஷியாபேகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.