பொத்தனூர் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு மாதேஸ்வரன் எம்.பி. பூமி பூஜை.
பொத்தனூர் பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணிக்கு நாமக்கல் எம்.பி மாதேஸ்வரன் பூமி பூஜை
பரமத்திவேலூர், ஜன.8: நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் பாராளு மன்ற உறுப்பினர் உள்ளூர் பகுதி மேம்பாட்டுத்திட்ட த்தின் 2024 - 2025- ன்கீழ் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் வார்டு எண்.14 தாய்சேய் நலவிடுதி எதிரில் சாலை மற்றும் வார்டு எண்.14 காமாட்சியம்மன் கோவில் எதிரில் சாலைகளை மழைநீர் வடிகாலுடன் கூடிய சிமெண்ட் சாலை அமைத்தல் பணிக்கு மாதேஸ்வரன் எம்.பி. பூமி பூஜை செய்து தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத்தலைவர் கருணாநிதி. செயல் அலுவலர் ஆறுமுகம் துணைத்தலைவர் அன்பரசு ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். இந்நிகழ்ச்சியில் நிகழ்ச்சியில் பேரூராட்சி என்ற உறுப்பினர்கள் பேரூராட்சி இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவுமேற்பார்வையாளர் குணசேகரன். வரி வசூலர்கள் குணசேகரன், பன்னீர்செல்வம், பேரூரா ட்சி அலுவலக பணியாளர்கள், பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.