முதியவரை பீர் பாட்டிலால் தாக்கியவர் கைது.
முதியவரை பீர் பாட்டிலால் தாக்கியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்தி வேலூர், ஜன.8: பாண்டமங்கலம் அருகே உள்ள அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் கருணாநிதி ( 50). இவர், அண்ணாநகர் அருகில் உள்ள ரங்கம்பாளையம் வெட்டுக்காட்டுதோட்டம் பகுதியைச் சேர்ந்த துரைசாமி (41) என்பவருக்கு கடனாக ரூ.500 கொடுத்துள்ளார். நீண்ட நாட்களாக வாங்கிய பணத்தை திருப்பி தராததால் கருணாநிதி நேரில் சென்று துரைசாமியிடம் பணத்தை கேட்டுள்ளார். அப்போது இருவருக்கும் வாய்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த துரைசாமி அங்கு வைத் திருந்த பீர் பாட்டிலை எடுத்து தலையில் அடித்துள் ளார். இதில் கருணாநிதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கருணாநிதி ஜேடர்பாளையம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், துரைசாமி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். பின்னர் அவரை பரமத்தி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிபதியின் உத்தரவின் பேரில் பரமத் தியில் உள்ள கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.