திருப்பத்தூரில் தேமுதிகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தேமுதிவினர் பொங்கல் தொகுப்பு உதவித்தொகை ஆயிரம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Update: 2025-01-06 07:10 GMT
திருப்பத்தூரில் தேமுதிகவினர் பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகே தேமுதிக மாவட்டச் செயலாளர் அரிகிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரியும், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் சம்பவத்தை கண்டித்தும், பொங்கல் தொகுப்புடன் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்க வலியுறுத்தியும் மற்றும் தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதை பொருட்களை தடுக்க வலியுறுத்தி தேமுதிக கட்சியினர் 100-க்கும் மேற்பட்டோர் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதனை தொடர்ந்து கோரிக்கை மனுவை தேமுதிக கட்சி நிர்வாகிகள் ஒன்றிணைந்து மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார்கள்.

Similar News