நாட்றம்பள்ளியில் பாமகவினர் ஆர்ப்பாட்டம்
நாட்றம்பள்ளியில் பாமகவினர் நீதிமன்றம் அமைக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு நீதிமன்றம் வேண்டி பேரூராட்சி முன்பு பாமகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பேரூராட்சி அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி மேற்கு மாவட்ட தலைவர் குட்டிமணி தலைமையில் நாட்றம்பள்ளி தாலுகாவிற்கு நீதிமன்றம் வேண்டும் என வலியுறுத்தி பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பந்தாரப்பள்ளி ஊராட்சியில் நூற்றுக்கணக்கான பனை மரங்களை வெட்டி அப்புறப்படுத்தி அரசு கலைக் கல்லூரி கட்டிடம் கட்டி வருகின்றனர். நீதிமன்றம் அமைக்க கோரி ஒன்பது மாதங்களாகியும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை என அதனை கண்டிக்கும் வகையில் பாமகவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட பாட்டாளி மக்கள் கட்சியினர மற்றும் பொதுமக்கள் என கலந்து கொண்டனர்.