உயிரோடு இருக்கும் போதே இறந்ததாக போலி சான்றிதழ் பெற்று அவருடைய இடத்தை வாங்கிய திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர்...

உயிரோடு இருக்கும் போதே இறந்ததாக போலி சான்றிதழ் பெற்று அவருடைய இடத்தை வாங்கிய திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர்;

Update: 2025-01-06 12:12 GMT
விருதுநகரில் உயிரோடு இருக்கும் போதே இறந்ததாக போலி சான்றிதழ் பெற்று அவருடைய இடத்தை வாங்கிய திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவர்... விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி தாலுகா நாசர் புளியங்குளத்தைச் சேர்ந்த இருளாயி என்பவருக்கு சொந்தமாக 86 சென்ட் நிலம் சூரங்குளத்தில் உள்ளது. இந்த இந்த நிலத்தை இருளாயிக்கு தெரியாமலேயே அவர் பெயரில் இறப்பு சான்றிதழ் பெற்று பெற்று அவருடைய சித்தப்பா தங்கம் என்பவர் கடந்த 2024ம் ஆண்டு நரிக்குடி 1வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ஜெயராணி அவளின் கணவர் ஜெயராஜ் என்பவருக்கு விற்றதாகவும், இருளாயி என்பவர் கடந்த நான்கு நாள்களுக்கு முன்பு பட்டா மாறுதலுக்காக விஏஓ சந்தித்த போது நீங்கள் இருந்துவிட்டதாக போலி சான்றிதழ் வாங்கி அந்த இடத்தை விற்றதாக கூறியதாகவும் தெரியவந்ததை அடுத்து இருளாயி குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்துள்ளார். மேலும் இது சம்பந்தமாக அவருடைய சித்தப்பா தங்கவேலிடமும் மற்றும் நரிக்குடி ஒன்றிய கவுன்சிலர் ஜெயராணியின் கணவர் ஜெயராஜ் இடமும் முறையிட்ட பொழுது ஜெயராஜ் தங்களுடைய குடும்பத்தை மிரட்டுவதாகவும், எனவே தங்கள் உயிருக்கு பாதுகாப்பு வேண்டியும் மேலும் தங்களுடைய நிலத்தை மீட்டு தர வேண்டியும், சம்மந்தப்பட்ட இருளாயி குடும்பத்தினர்கள் இன்று விருதுநகர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து கோரிக்கை மனுவினை அளித்தனர். ஆளும் கட்சியை சேர்ந்த ஜெயராஜ் தனது அதிகார பதவியை பயன்படுத்தி அரசு அதிகாரிகளை மிரட்டி போலியாக இறப்பு சான்றிதழ் பெற்று இடத்தை வாங்கி உள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. பேட்டி: இருளாயி (உயிரிழந்ததாக போலியாக சான்றிதழ் பெறப்பட்ட பெண்) 2. மூவேந்தன் (இருளாயி உறவினர்)

Similar News