ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் ட்ரோன் இயந்திரத்தை இயக்கி ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர்*
ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் ட்ரோன் இயந்திரத்தை இயக்கி ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர்*;
சட்டப்பேரவையில் ஆளுநர் வெளியேறிய விவகாரத்தில் குடியரசுத் தலைவர் தலையிட்டு ஆளுநரை திரும்ப பெற வேண்டும் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளத்தில் நடைபெற்ற மண்டல அளவிலான வேளாண்மை திருவிழாவில் விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேட்டி மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் பேட்டி ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் ட்ரோன் இயந்திரத்தை இயக்கி ஆய்வு செய்த பாராளுமன்ற உறுப்பினர் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே கோவிலாங்குளம் மண்டல வேளாண்மை அலுவலகத்தில் மண்டல அளவிலான வேளாண்மை திருவிழா கண்காட்சி கடந்த மூன்று தினங்களாக நடைபெற்றது. இந்த விழாவில் இறுதி நாளில் இன்று விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பங்கேற்று கண்காட்சியில் இடம் பெற்றுள்ள வேளாண் பொருட்களை பார்வையிட்டார். மேலும் ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் ட்ரோன் இயந்திரத்தையும் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் இயக்கி அது எவ்வாறு பணி செய்கிறது என்பது குறித்து ஆய்வு செய்து அதன் பணிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசினார் அப்போது சட்டப்பேரையில் ஆளுநர் வெளியேறியது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, ஆளுநரின் செயல் விளையாட்டுத்தனமாக உள்ளது இது மிகவும் அபத்தமாக உள்ளது. இது ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை ஒட்டியதாக உள்ளது. 51 ஆண்டு காலம் சுதந்திர நாட்டில் தேசிய கொடி ஏற்றாதவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர் அவர்களுடைய கண்காணிப்பில் இருக்கும் ஆளுநர் ரவியின் செயல் கண்டிக்கத்தக்கது. முதலில் தமிழ்த்தாய் வாழ்த்தும் கடைசியில் தேசிய கீதம் இசைப்பதும் தான் தமிழ்நாட்டின் மரபு. ஆளுநர் ரவி இதில் அரசியல் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது. குடியரசுத் தலைவர் இதில் தலையிட்டு ஆளுநரை திரும்ப பெற வேண்டும். முதல்வரை சிறுமைப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு தமிழக சட்டமன்றத்தையும் தமிழகத்தையும் தமிழையும் சிறுமைப்படுத்திக் கொண்டிருக்கிறார் இதில் குடியரசுத் தலைவர் தலையிட வேண்டும் என பேசினார். அருப்புக்கோட்டை வழியாக மதுரை தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, மத்திய அரசு நமது பகுதியை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்பதற்கு உதாரணம் மதுரை அருப்புக்கோட்டை தூத்துக்குடி அகல ரயில் பாதை திட்டம். இந்த திட்டத்தில் முழுமையாக நிலம் கொடுக்கப்பட்டுள்ளது. நிலம் எடுக்கப்பட்ட பின் போதிய நிதியை கொடுக்காமல் அரசியல் செய்து இந்த திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளது கண்டிக்கத்தக்கது. இந்தத் திட்டத்திற்காக தொடர்ந்து பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பேசி வருகிறோம். ஒரு தெளிவான பதிலை அளிக்காமல் ரயில்வே அமைச்சர் தொடர்ந்து தட்டிக் கழித்து வருகிறார் இது ஒரு முக்கியமான திட்டம் என பேசினார். காட்டுப்பன்றிகள் பிரச்சினை தொடர்பாக செய்தியாளர்கள் கேட்டதற்கு விருதுநகர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்தில் மிகப்பெரிய பிரச்சினையாக காட்டுப்பன்றி பிரச்சனை உள்ளது. மத்திய அரசு சட்டத்தில் காட்டு பன்றிகள் வனவிலங்குகள் பட்டியலில் இருந்து நீக்கப்பட வேண்டும். அதற்கு சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் இதற்கு மாநில அரசு முழு முயற்சி எடுக்கப்பட உள்ளது. மத்திய அரசு இதில் தலையிடாமல் இருக்க வேண்டும். வருங்காலத்தில் மத்திய வனத்துறை சந்தித்து இந்த பிரச்சனை குறித்து பேச உள்ளேன் என கூறினார்.