விருதுநகர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.
விருதுநகர் மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு.;
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெயசீலன் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று காலை வெளியிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள விருதுநகர், அருப்புக்கோட்டை, திருச்சுழி சாத்தூர்,சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம் ஆகிய ஏழு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியலை விருதுநகர் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெயசீலன் இன்று காலை வெளியிட்டார். 01.01.2025-ம் தேதியை தகுதிநாளாக கொண்டு வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம் நவம்பர் 16,17,23,24 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. புதிதாக 2025-ல் புதிதாக 31860 வாக்காளர்கள் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.இதன்படி மொத்த ஆண் வாக்காளர்கள் 7 லட்சத்து 85 ஆயிரத்து 132. பெண் வாக்காளர்கள் 8 லட்சத்து 23 ஆயிரத்து 836 இதர வாக்காளர்கள்:256 மொத்த வாக்காளர்கள் 16 லட்சத்து 9 ஆயிரத்து 224 மேற்படி, சிறப்பு சுருக்கத் திருத்தம்-2025ன் போது வாய்ப்பினை தவறவிட்டோர் மற்றும் 01.01.2025 அன்று 18+ வயதினை பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்புவோர், திருத்தம், மற்றும் நீக்கம் செய்ய விழையும் அனைவரும் 06.01.2025 தேதிக்கு பின் நடைபெறவுள்ள வாக்காளர் பட்டியல் தொடர் மேம்பாட்டு காலத்தில் Voter Service Portal, Voters Helpline App Saksham App வழியிலும், உரிய படிவங்களை பூர்த்தி செய்து வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மற்றும் வட்ட, கோட்ட, மற்றும் நகராட்சி அலுவலகங்களிலும் சமர்ப்பிக்கலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.