சிவகங்கை மாவட்ட எஸ்.பி.யாக ஆஷிஷ் ராவத் பொறுப்பேற்பு
சிவகங்கை மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக ஆஷிஷ் ராவத் பொறுப்பேற்றார்.
சிவகங்கை மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த டோங்கரே பிரவீன் உமேஷ். சென்னை லஞ்சஒழிப்புத் துறை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் சிவகங்கை மாவட்டத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவர் நேற்று(ஜன.06) மாலை சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். உத்தராகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2014-ம் ஆண்டு ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்றார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் உதவி காவல் கண்காணிப்பாளராகவும், புதுடெல்லியில் பட்டாலியன் பிரிவில் காவல் கண்காணிப்பாளராகவும் பணிபுரிந்துள்ளார். அதைத்தொடர்ந்து நீலகிரி, தஞ்சை மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்தார்.