திருப்பத்தூர் கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையில் லாரி ஓட்டுநர் உள்ளிருப்பு போராட்டம்
திருப்பத்தூர் கேத்தாண்டப்பட்டி சர்க்கரை ஆலையில் லாரி ஓட்டுநர் உள்ளிருப்பு போராட்டம்;
திருப்பத்தூர் மாவட்டம் கரும்பு அரவை தொடங்கிய அடுத்த நாளே சர்க்கரை ஆலையில் எந்திர பழுது காரணமாக கரும்பு அரவை நிறுத்தம்! சக்கரை ஆலையின் முன்பு லாரி ஓட்டுனர்கள் போராட்டம்.* திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த கேத்தாண்டப்பட்டி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை கடந்த 19ஆம் தேதி 2024-25-ம் ஆண்டு அரவைப் பருவ துவக்கியது. இந்த நிலையில் கரும்பு அரவை துவங்கிய நிலையில் சுமார் 1000 டன் கரும்பு மட்டுமே அரவை நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் ஒரே நாளில் கரும்பு அரவை எந்திரத்தில் பழுது ஏற்பட்ட காரணத்தினால் கரும்பு அரவை நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கரும்பு அரவைக்கு கொண்டுவரப்பட்ட பல டன் மதிப்பிலான கரும்புகள் லாரியில் நிறுத்தப்பட்டு உள்ளது மேலும் வெயிலின் தாக்கத்தின் காரணமாக கரும்பின் எடை குறைந்து விவசாயிகள் பாதிக்கப்படுவதாகவும் லாரி ஓட்டுனர்கள் கடும் வேதனை தெரிவித்தனர். இதனையடுத்து கடந்த திருவண்ணாமலை, போளூர், செங்கம், ஊத்தங்கரை, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலிருந்து 4 நாட்களுக்கு முன்பு 100க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு அரவைக்காக ஏற்றி வந்துள்ள நிலையில் சக்கரை ஆலை பழுதாகி உள்ளதால் ஓட்டுனர்கள் அங்கியே காத்திருக்கின்றனர். இதனால் ஆத்திரமடைந்த லாரி ஓட்டுனர்கள் தற்போது சக்கரை ஆலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றர். இந்த சம்பவம் அறிந்த நாட்றம்பள்ளி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட லாரி ஓட்டுனர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.