திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் குழந்தைஉயிரிழப்புக்கு மருத்துவர்தான் காரணம் பெற்றோர்கள் குற்றச்சாட்டு
காய்ச்சல் காரணமாக சுமார் 2 வயது குழந்தை உயிரிழப்பு!. கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை;
திருப்பத்தூர் மாவட்டம் காய்ச்சல் காரணமாக சுமார் 2 வயது குழந்தை உயிரிழப்பு!. கூடுதல் மருத்துவர்கள் பணியமர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை.* திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பெரிய முக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த செந்தில்குமார் - அஞ்சலி தம்பதியினரின் ஒன்றரை வயது குழந்தை திவ்யதர்ஷினி என்ற குழந்தைக்கு கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்துள்ளது. காய்ச்சலின் தீவிரம் அதிகமானதால் நேற்று குழந்தையை திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். குழந்தைக்கு வைரஸ் காய்ச்சல் காய்ச்சல் இருக்க கூடும் என்று தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து அங்கு பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தியுள்ளனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்துள்ளது. இந்த நிலையில் இதுகுறித்து உறவினர்கள் குழந்தை மருத்துவர் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அதனால் மனம் உடைந்த மருத்துவர் நான் இங்கு இருப்பதே ஒரே ஒரு மருத்துவர்தான் ஒட்டுமொத்த நோயாளிகளையும் நான் சென்று கவனிக்க வேண்டும் உங்களை மட்டுமே பார்த்துக்கொண்டு இருக்க முடியாது என்று கூறியுள்ளார். இதனால் சம்பந்தப்பட்ட உறவினர்கள் அரசு சார்பில் திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு கூடுதலாக மருத்துவர்கள் நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இந்த குழந்தை இறந்துவிட்டது ஆனால் இருப்பினும் இனி வருங்காலங்களில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் எந்த குழந்தையும் இறந்து விடக்கூடாது என்றும் கோரிக்கை வைத்தனர்.