திருப்பத்தூரில் தமிழக ஆளுநரை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

திருப்பத்தூரில் தமிழக ஆளுநரை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.;

Update: 2025-01-07 08:53 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழக ஆளுநரை கண்டித்து திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர், வட்டாட்சியர் அலுவலகம் அருகே திமுகவினர் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவியை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக சட்டசபையையும் தமிழ்த்தாய் வாழ்த்தையும் அவமதித்ததாக கூறி ஆளுநர் ரவி உடனடியாக பதவி விலக வேண்டும், மேலும் பாஜக, அதிமுக ரகசிய கூட்டணியை கண்டிக்கிறோம் என கண்டன கோஷங்களை எழுப்பி திமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த போராட்டத்தில் திமுக கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.

Similar News