கோவை: தவறான பாதையில் தமிழக அரசு சென்று கொண்டு இருக்கிறது !
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன், தமிழக அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக கூறினார்.
கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது அவர்,பா.ஜ.க மற்றும் எதிர்க் கட்சிகளின் போராட்டங்களுக்கு எப்பொழுதுமே அனுமதி கிடையாது. பெண் தலைவர்கள் எப்பொழுதுமே வீதியில் இறங்கி போராட அனுமதி கிடையாது, தி.மு.க ஆட்சி ஒரு சர்வாதிகார ஆட்சி, மத்திய அரசு தமிழக அரசுக்கு எதிரான மனநிலையில் நாங்கள் இல்லை என எப்பொழுதோ கூறி விட்டது. ஆனால் தி.மு.க சார்ந்த கட்சிகளுக்கும், தி.மு.க வுக்கும் போராட எப்பொழுதுமே அனுமதி உண்டு. ஆனால் இன்று தேசிய கீதம் உதாசீனப்படுத்தப்பட்டு இருக்கிறது. அதுக்கு ஆளுநர் ஒரு கண்டனத்தை தெரிவித்து இருக்கிறார். ஆனால் நீங்கள் அவரை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு எல்லா இடங்களிலும் அனுமதி கொடுத்திருக்கிறீர்கள். நாங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும், தி.மு.க நீங்கள் ஆர்ப்பாட்டம் செய்தால் சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுமா? இங்கு என்ன ஆட்சியை நடந்து கொண்டு இருக்கிறது , கேட்டால் ஆளுநர் பிரிவினைவாதத்தை தூண்டுகிறார் என்று கூறுகிறீர்கள். தேசிய ஒற்றுமைக்கான தேசிய கீதத்திற்கு மரியாதை கொடுங்கள் என்று சொன்னால் அதை பிரிவினைவாதம் என்று புதிய அர்த்தத்தை தமிழக அரசால் தான் கற்பிக்க முடியும். தமிழக அரசு தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறது எனக் கூறினார்.