வேலாயுதம்பாளையம் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
வேலாயுதம்பாளையம் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம்.
வேலாயுதம்பாளையம் டூவீலர்கள் நேருக்கு நேர் மோதல். ஒருவர் படுகாயம். கரூர் மாவட்டம், புகலூர் தாலுக்கா, நடையனூர், நத்தமேடு பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி வயது 53. இவர் ஜனவரி 6ஆம் தேதி காலை 9:15- மணி அளவில், கட்டிப்பாளையத்தில் இருந்து நத்தமேடு செல்லும் சாலையில் அவரது டூவீலரில் சென்று கொண்டிருந்தார். இவரது வாகனம், வேலாயுதம்பாளையம் டிஎன்பிஎல் நிறுவனத்தின் வாய்க்கால் பாலம் அருகே சென்றபோது, எதிர் திசையில், அருகில் உள்ள நஞ்சை புகலூர், திருக்காடுதுறை பகுதியைச் சேர்ந்த புவனேஸ் வயது 23 என்பவர் வேகமாக ஓட்டி வந்த டூ வீலர், பழனிச்சாமி ஓட்டிச் சென்ற டூவீலர் உடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் வாகனத்துடன் கீழே விழுந்த பழனிச்சாமிக்கு கழுத்து, இடது கால் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவரை மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் கரூரில் உள்ள செந்தில் கேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவம் தொடர்பாக பழனிச்சாமி அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இது தொடர்பாக டூவீலரை வேகமாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டி விபத்து ஏற்படுத்திய புவனேஷ் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.