சின்னசேலம் ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது.சின்னசேலம் பகுதியை சேர்ந்த 18 வயது வரையிலான மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் சுப்பிரமணி தலைமை தாங்கினார். 18 வயது வரை உள்ள 55 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்து கொண்டனர். எலும்பு முறிவு மருத்துவர் பிரபாகரன், காது மூக்கு தொண்டை நிபுணர் கணேஷ்ராஜா, கண் மருத்துவர் காயத்ரி, மனநல மருத்துவர் சிலம்பரசன் ஆகியோர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர். முகாமில் கலந்துகொண்ட அனைவருக்கும் யுடிஐடி எனும் தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான பதிவு செய்யப்பட்டது.