சிறப்பு அலங்காரத்தில் மீனாட்சி அம்மன்.
மதுரை மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் மாதந்தோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதனடிப்படையில் மார்கழி மாதத்தில் தைலக்காப்பு திருவிழா நடைபெற்று வருகிறது இத்திருவிழாவின் ஆறாம் நாளான இன்று (ஜன.9) மீனாட்சியம்மன் சிறப்பு அலங்காரத்தில் புது மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து சென்றனர்.