4,92,891 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு- ஆட்சியர் தகவல்!
அரசு செய்திகள்
புதுகை மாவட்டத்தில் 4,92,891 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். புதுகை மாவட்டத்தில் 4,91,944 அரிசி அட்டை தாரர்களுக்கும், 947 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.