அரக்கோணம் நகராட்சியில் அதிரடி செயல்!
வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு
அரக்கோணம் நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் குடிநீர் கட்டணம், வீட்டு வரி, சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி, மற்றும் குத்தகை இனம் உள்ளிட்ட வரிகள் சுமார் ரூ.3½ கோடி பாக்கி உள்ளது. நகராட்சி ஆணையாளர் கன்னியப்பன் தலைமையில் மேலாளர், பொறியாளர் மற்றும் பணியாளர்கள் சேர்ந்து அதிரடியாக நேற்று முதல் தீவிர வரி வசூலில் ஈடுபட்டு வருகின்றனர். அரக்கோணம் டவுன் ஹால் தெரு மற்றும் மணி யக்கார தெரு ஆகிய பகுதிகளில் வரி செலுத்தாதவர்களின் குடிநீர் இணைப்புகளை துண்டித்தனர். இதுபற்றி நகராட்சி ஆணையாளர் கூறும்போது, நகராட்சி திட்ட பணிகளுக்காக வரி வசூல் செய்யப்படுகிறது. வரி செலுத்த தவறுவோரின் குடிநீர் இணைப்பு துண்டிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடரும் என எச்சரிக்கை விடுத்தார்.