புகையிலைப் பொருட்கள் விற்பனை 22 கடைகளுக்கு சீல்

திண்டுக்கல் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 22 கடைகளுக்கு சீல்,70 கிலோ புகையிலை பொருட்கள், 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல், ரூ.6,58,000 அபராதம்

Update: 2025-01-09 04:19 GMT
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்புதுறை அதிகாரி கலைவாணி தலைமையிலான உணவு பாதுகாப்புத்துறையினர் திண்டுக்கல், நத்தம், ஆத்தூர், நிலக்கோட்டை, வத்தலகுண்டு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டபோது 22 கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களும், 4 கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்பொருட்களும் விற்பனை செய்வது தெரிய வந்ததை தொடர்ந்து அந்த கடைகளில் விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 70 கிலோ புகையிலை பொருட்கள், 100 பிளாஸ்டிக் பைகள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மொத்தம் 26 கடைகளின் உரிமையாளர்களுக்கு ரூ.6,58,000 அபராதம் விதித்தனர் மேலும் புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 22 கடைகளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

Similar News