குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் தோவாளை வடக்கூர் பகுதியை சார்ந்த பத்மா என்பவர் கடந்த 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மூன்று லட்சம் விதம் 4 பாண்டுகளாக ரூ. 12 லட்சத்தினை டெபாசிட் செய்திருந்தார். இதனிடையே இந்த மாதம் அவர் மகளுக்கு திருமணம் வைத்திருப்பதாக கூறி டெபாசிட் தொகையினை தருமாறு கூறியுள்ளார். ஆனால் டெபாசிட் பாண்டினை பெற்றுக் கொண்ட கூட்டுறவு சங்க ஊழியர்கள் இரு தவனையாக சிறு தொகையினை கொடுத்து விட்டு மீதமுள்ள 2 லட்சத்து 20 ஆயிரம் தொகையினை கொடுப்பதற்கு காலம் தாழ்த்தி வந்தனர். இதனால் இன்று 9-ம் தேதி தோவாளை பாஜக ஒன்றிய தலைவர் பத்மநாபன் தலைமையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் பத்மாவுக்கு வழங்க வேண்டிய தொகையினை உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் வாசலின் முன்பு அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இத்தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாஜக நிர்வாகிகளிடமும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகளிடமும் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக பத்மாவுக்கு வழங்க வேண்டியிருந்த 2 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க அதிகாரிகள் வழங்கியதன் அடிப்படையில் பாஜகவினர் முற்றுகை போராட்டத்தை கைவிட்டனர்.