ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் கூலி தொழிலாளி உடல் மீட்பு
ஜோலார்பேட்டை அருகே கிணற்றில் கூலி தொழிலாளி உடல் மீட்பு
திருப்பத்தூர் மாவட்டம் திரியாலம் கிராமத்தில் கிணற்றில் இறந்த நிலையில் மேஸ்திரி சடலம் 3 நாட்களுக்குப் பிறகு தீயணைப்பு துறையினர் மீட்பு! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த புதூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (37) கட்டிட மேஸ்திரி இவருக்கு திருமணம் ஆகி ரம்யா என்ற மனைவியும், இரண்டு பெண், ஒரு ஆண் பிள்ளைகள் உள்ளது. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வருவதாக தெரிகிறது இந்த நிலையில் கடந்த ஐந்தாம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் திரும்பவும் வீடு திரும்பவில்லை இதனால் பல்வேறு இடங்களிலும் தேடிவந்தனர். அதனைத் தொடர்ந்து திரியாலம் பகுதியில் உள்ள மூர்த்தி என்பவருடைய விவசாயிகள் கிணற்றில் சடலமாக கிடப்பதாக தகவல் தெரிவித்தனர் தகவலின் பெயரில் வந்த தீயணைப்பு துறையினர் கோவிந்தராஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கிணற்றில் தவறி விழுந்தாரா? அல்லது பணத்திற்காக அடித்து கொலை செய்யப்பட்டாரா என்ற வண்ணத்தில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.