ஜல்லிக்கட்டு பணிகள்: அமைச்சர் ஆய்வு.
மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர் மூர்த்தி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
மதுரை.அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி வரும் ஜனவரி 14-ஆம் தேதி தை திருநாளில் நடைபெற உள்ளது. ஜல்லிக்கட்டு போட்டிக்கு இன்னும் ஒரு வார காலமே உள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . இந்த நிலையில் முன்னேற்பாடு பணிகள் குறித்து வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை மூர்த்தி இன்று (ஜன.7) ஆய்வு மேற்கொண்டார். அமைச்சர் மூர்த்தி ஆய்வின்போது மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மதுரை மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். மாடுபிடி வீரர்கள் பரிசோதனை மையம்,காளைகள் மருத்துவ பரிசோதனை மையம் , வாடிவாசல் அமையும் இடங்கள் போன்றவைகளை அமைச்சர் மூர்த்தி ஆய்வு செய்தார். பின்னர் அதிகாரிகளிடம் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் எந்தளவு நடைபெற்றுள்ளது என்பது குறித்து கேட்டறிந்தார்.