குமரி ஊரக வளர்ச்சித்துறை ஊழியர்கள் மறியல் - கைது

நாகர்கோவில்

Update: 2025-01-07 10:08 GMT
குமரியில் காலியாக உள்ள ஊராட்சி செயலாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கேட்டும் கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுது நீக்கும் திட்டத்திற்கான பணியாளர்களை உடனடியாக நியமிக்க கேட்டும், ஊராட்சிகளை நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளோடு இணைத்தல் மற்றும் பேரூராட்சிகளாக தரம் உயர்த்தும் திட்டத்தை ரத்து செய்யட்டும், மற்றும் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து தமிழ்நாடு முழுவதும் ஊரக வளர்ச்சி துறை ஊழியர்கள் போராட்டம் இன்று நடத்தினர்.            அதன் ஒரு பகுதியாக குமரி மாவட்டம் நாகர்கோயிலில் ஊரக வளர்ச்சித் துறை ஊழியர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சிறிது நேரம் அப்பகுதியில் போக்குவரத்து முடங்கியது. தொடர்ந்து முழக்கங்கள் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். பின்னர் அப்பகுதியில் வாகன போக்குவரத்து சகஜ நிலைக்கு திரும்பியது.

Similar News