கோவை: தமிழக ஆளுநரை கண்டித்து திமுகவினர் ஆர்ப்பாட்டம் !
கோவை மாவட்ட திமுக கழகம் சார்பில் டாடாபாத் பகுதியில் தமிழக ஆளுநரை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நேற்றைய தினம் தமிழக சட்டப்பேரவை நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நடந்து கொண்ட விதத்தை கண்டித்து இன்று தமிழகம் திமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக கழகம் சார்பில் டாடாபாத் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக், திமுக சொத்து பாதுகாப்பு குழு உறுப்பினர் பொங்கலூர் பழனிச்சாமி உட்பட திமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் பாஜக, மற்றும் அதிமுகவை கண்டித்தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டது. இதில் கலந்துகொண்ட திமுகவினர் ஆளுநரை கண்டித்து கண்டன பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர்.