சிறந்த திருநங்கைக்காண விருது ஆட்சியர் தகவல்
சிவகங்கை மாவட்டம், தமிழக முதலமைச்சர் வழங்கப்படவுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருதிற்கு தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.;
சிவகங்கை மாவட்டம், தமிழக முதலமைச்சர் வழங்கப்படவுள்ள 2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருதிற்கு தகுதியுடைய நபர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025-ஆம் ஆண்டு ஏப்ரல் 15-ஆம் தேதி, திருநங்கைகள் தினம் கொண்டாடப்படுவதை அடுத்து, திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவைபுரிந்து முன்மாதிரியாக திகழும் திருநங்கைகளை சிறப்பிக்கும் வகையில் “2025-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கைக்கான விருது” மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் வழங்கப்பட உள்ளது. இவ்விருதிற்கு, ரூ.1,00,000/-(ரூபாய் ஒரு இலட்சம்) பரிசுத் தொகைக்கான காசோலை மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவை வழங்கப்படவுள்ளது. அதன்படி, விதிமுறைகளைப் பின்பற்றி தகுதியுடைய நபர்கள் http://awards.tn.gov.in என்ற இணையதள முகவரியின் வாயிலாக விண்ணப்பிக்கலாம். இதில், தெரிவிக்கப்பட்டுள்ள விதிமுறைகளான, அரசாங்கத்தின் உதவி பெறாமல் தனது வாழ்க்கையை கட்டமைத்துக்கொண்ட திருநங்கைகளாக இருத்தல் வேண்டும். மேலும், திருநங்கைகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்து, குறைந்தபட்சம் 5 திருநங்கைகள் தங்களது வாழ்வாதார ஆதரவைப் பெறவும், கண்ணியமான வாழ்க்கையை நடத்தவும் உதவிபுரிந்த திருநங்கைகளாக இருத்தல் வேண்டும். தமிழ்நாடு திருநங்கை நலவாரியத்தில் உறுப்பினராக இருத்தல் கூடாது போன்ற விதிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தொடர்பான விரிவான கருத்துருக்களை வருகின்ற 10.02.2025-ஆம் தேதிக்குள், சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். மேலும், மேற்கூறிய தகுதியிருப்பின் உரிய சான்றுகளோடு சிவகங்கை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்து, தமிழ்நாடு திருநங்கைகள் நல வாரிய அடையாள அட்டை பெற்றுள்ள திருநங்கையர் மற்றும் திருநம்பியர் இவ்விருதிற்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.