சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டம்

சிவகங்கை மாவட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சமூகத்தினர்கள் இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம்;

Update: 2025-01-07 11:57 GMT
சிவகங்கை மாவட்டம், முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM - ARISE) திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சமூகத்தினர்கள் http://newscheme.tahdco.com என்ற இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்து பயன்பெறலாம் முதலமைச்சரின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் (CM - ARISE) திட்டத்தின் கீழ் திட்ட மதிப்புத் தொகையில் 35% அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். மேலும், இத்திட்டத்தில் தவனைத் தொகையினை தவறாமல் திரும்ப செலுத்தும் பயனாளிகளுக்கு, மேலும் 6% சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ள புதிரை வண்ணார் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் பயன்பெற தாட்கோ இணையதள முகவரியில் (http://newscheme.tahdco.com) விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களுக்கு, மாவட்ட மேலாளர், தாட்கோ அவர்களை அணுகி விவரம் பெற்று, உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.

Similar News