உஞ்சினி கிராமத்தில்  மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி அண்ணாதுரையின் படத்திறப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு புகழஞ்சலி

உஞ்சினி கிராமத்தில்  மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகி அண்ணாதுரையின் படத்திறப்பு நிர்வாகிகள் கலந்து கொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.;

Update: 2025-01-07 13:30 GMT
அரியலூர், ஜன.7- செந்துறையில் மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்ட நிர்வாகி அண்ணாதுரையின் படத்தை மாநில குழு உறுப்பினர் திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார்.. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உஞ்சினி  கிராமத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வட்டக்குழு உறுப்பினராகவும் கைநெசவு தொழிலாளர் சங்க அரியலூர் மாவட்ட நிர்வாகியாக செயல்பட்டு வந்த மறைந்த  வி.அண்ணாதுரையின் படத்திறப்பு நிகழ்ச்சி அவரது இல்லத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செந்துறை வட்ட செயலாளர் கு.அர்ச்சுணன் தலைமையில் நடைப்பெற்றது. மறைந்த அண்ணாதுரையின்  திருவுருவ படத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.வாலண்டினா திறந்து வைத்து புகழஞ்சலி செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்டக்குழு உறுப்பினர் பி.அழகுதுரை, மாவட்ட செயலாளர் எம்.இளங்ங்கோவன். திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் பூ. செல்வராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர்மணிவேல் துரைசாமி, எ.கந்தசாமி எம்.வெங்கடாசலம் , வி..பரமசிவம், துரைஅருணன், டி.அம்பிகா விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில துணை செயலாளர் ம.கருப்புசாமி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் ஒன்றிய செயலாளர் அருண்பாண்டியன், மாதர் சங்க மாவட்ட தலைவர் பி.பத்மாவதி, ஊராட்சி ஒன்றிய துணை தலைவர் எஸ்.மணிவேலன் கைநெசவு மாவட்ட தலைவர் எஸ்.என்.துரைராஜ், வட்டக்குழு உறுப்பினர்கள் இ.பன்னீர்செல்வம், ஜி.செண்பகவள்ளி,கருப்பையா, சீமான் பெ தமிழரசி, தலைமை நாட்டர் எம்.அப்பாவு,ஓய்வு பெற்ற ஆசிரியர் குப்புசாமி, என்.எல்.சி பெரியசாமி, சி.செல்வகுமார் உள்ளிட்ட பலரும் கலந்து கலந்துகொண்டு புகழஞ்சலி செலுத்தினர்.தொடர்ந்து மறைந்த அண்ணாதுரையின் மகன் சத்தியமூர்த்தி, மகள்கள் லைலா, செங்கொடி ஆகியோர்க்கு தலைவர்கள், நிர்வாகிகள் ஆறுதல் கூறினர்

Similar News