பாமக சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு
பள்ளிபாளையத்தில் பாமக சார்பில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்கள் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது
அண்ணா பல்கலைக்கழக மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமையை கண்டித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு அன்புமணி சௌமியா சென்னையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட பொழுது தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார். இந்நிலையில் தமிழக அரசை கண்டித்து, பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக குமாரபாளையம், பள்ளிபாளையம், வெப்படை, ஒட்டமெத்தை, அக்ரஹாரம் ஆகிய பகுதிகளில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லா மாநிலம் தமிழகம் நீதி கேட்டு போராடும் பெண்களை கைது செய்வதுதான் திராவிட மாடல் ஆட்சியா? என வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் குமாரபாளையம் தொகுதி முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.